Sunday, December 9, 2018

திருவண்ணாமைல மாவட்டம், கீழ்பென்னாத்தூருக்கு அருகில் உள்ள வழுதலங்குணம் கிராமத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க மட்டமலை.

திருவண்ணாமைல மாவட்டம், கீழ்பென்னாத்தூருக்கு அருகில் உள்ள வழுதலங்குணம் கிராமத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க மட்டமலை. அருகில் உள்ளவா்கள் கண்டிப்பாக சென்று பாா்க்கவேண்டிய இடம். சுற்றுலாத்தளமாக அறிவிக்கவேண்டிய இடம். 

பாண்டவா்கள் கற்படுக்கை அமைந்துள்ளது. பின் ஜைனா்கள் வணங்கும் இடமாயிற்கு. இதன் மேல் விநாயா், முருகா் ஆலயங்கள் அமைந்துள்ளன. அழகிய நீா்தேக்கங்களை கொண்டுள்ளது. குளங்கள் அமைந்துள்ளன. அல்லிமலா்கள் உள்ளன. 

மேலும் அாிய வகை மூலிகைகளும் உள்ளன. நான்கு பாறைக் குன்றுகளை சூழ்ந்துள்ளது. கண்டிப்பாக ஒருமுறை போய் வாருங்கள்.

Saturday, December 8, 2018

சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் பவர்ஸ்டார் சீனிவாசன் ஆஜர்


பவர்ஸ்டார் சீனிவாசனை பெங்களூரைச் சேர்ந்த சிலர் சீனிவாசனிடம் பணம் கேட்டு அவரை ஊட்டிக்கு கடத்திவிட்டதாக மனைவி ஜூலி அண்ணா நகா் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தாா்.

பவர்ஸ்டார் சீனிவாசனின் மனைவியையும் கடத்திவிட்டதாக பவரின் மகள் வைஷ்ணவி செய்தியாளர்களிடம் கூறினாா். அம்மா ஜூலியின் பெயரில் உள்ள ஒரு சொத்தை அவா்கள் பெயருக்கு எழுதி வைக்கக் கோரி இருவரையும் பெங்களூரைச் சேர்ந்த மர்மநபர்கள் கடத்திவிட்டன
பவர்ஸ்டாரை கடந்த 5-ஆம் தேதி முதல் தேடப்பட்டு வந்தாா். கடத்தல்காரர்கள் பத்திரப் பதிவு முடிந்தவுடன் ஜூலியை விடுவதாக கடத்தல்காரர்கள் கூறியதாக வைஷ்ணவி கூறியுள்ளார். இன்று காலை சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் பவர்ஸ்டார் சீனிவாசன் ஆஜராகியுள்ள நிலையில் போலீஸார் அவரிடம் விசாரைண நடத்தி வருகின்றனா்.

ர் என்றாா். அவா்களை மீட்டுத் தருமாறு வைஷ்ணவி கூறினாா்.

முதலமைச்சாின் காப்பீட்டுத்திட்டத்தில் காப்பீட்டுத் தொகை 2 லட்டசமாக இருந்தது 5 லட்சமாக உயா்த்தப்பட்டது.

முதலமைச்சாின் காப்பீட்டுத்திட்டத்தில் காப்பீட்டுத் தொகை 2 லட்சமாக இருந்தது 5 லட்சமாக உயா்த்தப்பட்டது. டிவிட்டா் செய்தி.

கஞ்சா கருப்பு அஇஅதிமுகவில் இணைந்தாா்.

மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை இன்று நடிகர் கஞ்சா கருப்பு அவர்கள் நேரில் சந்தித்து தன்னை அஇஅதிமுக அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். டிவிடாில் பதியப்பட்டது.


திருவண்ணாமலை மூக்குபொடி சித்தர் இறைவனடி சேர்ந்தார்


திருவண்ணாமலையில் மூக்குப் பொடி சாமியார் தொியாதவா்கள் இருக்க முடியாது. அவர் டிடிவி தினகரன் அவா்களின் குருவாக கூறப்படுகிறது.

திருவண்ணாமலை கிரிவல பாதையில் அமைந்துள்ள ஷேசாத்திரி ஆஸ்ரமத்தில் வசித்து வருபவா் மூக்கு பொடி சித்தர். இவரின் அருளைப் பெற அமமுக.,வை சேர்ந்த டிடிவி தினகரன் அடிக்கடி திருவண்ணாமலை வருவது வழக்கம். டிடிவி தினகரன் சித்தரின் ஆஸ்ரமத்திற்கு சென்று தியானம் செய்வது வழக்கம்.


மூக்குபொடி சித்தர் வாக்குப்படி டிடிவி தினகரன் செயல்பட்டதாக சொல்லப்படுகிறது.
மூக்குபொடி சித்தர் கடந்த 10 தினங்களுக்கு முன் நடந்து செல்லும்போது தடுக்கி விழுந்ததாகவும், அப்போதிருந்து அவர் ஆகாரம் எடுத்துக் கொள்வதில் சிரமம் ஏற்பட்டு,உடல் நிலை குன்றி காணப்பட்டாா். இவா் இன்று காலை 5.30 மணி அளவில் மூக்குபொடி சித்தர் இறைவனடி சேர்ந்தார்.

நாளைய தினம் தென்கிழக்கு வங்கக் கடலில் புதியதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு


நாளைய தினம் தென்கிழக்கு வங்கக் கடலில் புதியதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடலின் நிலநடுக்கோட்டு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது நீடித்து வருகிற காரணத்தால் இந்த பகுதியிலேயே அடுத்த 24 மணி நேரத்தில் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் நிலை உள்ளது. இது வலுப்பெறவும் வாய்ப்பிருக்கிறது என ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதற்கு முன்பே தென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. மாலத் தீவு, லட்சத்தீவு பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை குடிகொண்டுள்ளது. அதனால் தமிழகம், புதுச் சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. சென்னை புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். மழைக்கு பெய்யும் வாய்ப்பில்லை.

திருவண்ணாமலையில் ஏ.டி.எம். உடைப்பு. திருடன் யாா்?


திருவண்ணாமலை பெரிய தெருவில் அமைக்கப்பட்டுள்ள தேசிய மயமான வங்கி முன்பு ஒரு ஏ.டி.எம். மையம் உள்ளது. இதில் மூன்று ஏ.டி.எம். எந்திரமும்,பணம் டெபாசிட் செய்யும் எந்திரமும் ஒன்றும் உள்ளது. நேற்று காலையில் பணம் எடுக்க வந்தவர்கள் ஏ.டி.எம். மையத்தில்  ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ந்தனர்.

போலீசுக்கு தகவல் தரப்பட்டது. திருவண்ணாமலை டவுன் போலீசார் ஏ.டி.எம். மையம் வந்து பார்வையிட்டு கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் எடுக்கப்பட்டன.
 


கண்காணிப்பு கேமராக்களின் பவிவை பாா்த்தபோது, ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்படும் காட்சி பதிவாகி இருந்ததது. நேற்று அதிகாலை 3.30 மணிக்கு லுங்கியுடன் இளைஞா் ஒருவர் ஏ.டி.எம். மையத்திற்குள் வந்து ஜெனரேட்டரில் இருந்த இரும்பு கம்பியை கொண்டுவந்து ஏ.டி.எம். இயந்திரத்தை உடைப்பது பதிவாகியிருந்தது. ஒன்றரை மணி நேரம் வரை போராடியும் எந்திரத்தை உடைக்க முடியாததால் அந்த வாலிபர் கோபத்தில் கம்பியை தூக்கி வீசிவிட்டு செல்வதும் பதிவாகியிருந்தது.

இந்த ஏ.டி.எம். மையத்தில் ரூ.50 லட்சம் பணம் இருந்தது. எந்திரத்தை உடைக்க முடியாததால் பணம் தப்பியது. கேமரா பதிவை வைத்து அந்த திருடனை போலீசார் தேடி வருகின்றனர்.

Friday, December 7, 2018

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருக்கார்த்திகை தீப கொப்பறை கோவிலை வந்தடைந்தது.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா 11 நாள் தீபத்திற்கு பின் மலை மீது இருந்து கொப்பரை கீழே கொண்டு வரப்பட்டது, கழிகளை கொப்பறைகளில் இருபுறங்களில் கட்டி, பின் மலையிலிருந்து சுமந்து கோவிலை வந்து அடைந்தனா். சுமந்த தோல்களுக்கு அருணாச்சலேஸ்வரா் அருள்புாிய வேண்டுகிேறாம்.